search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை சாவு"

    • குழந்தைக்கு பாட்டில் மூலம் பால் கொடுக்கும் போது மூச்சுதிணறல் ஏற்பட்டது.
    • போகும் வழியிலேயே அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே முதுகனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு 2 வயதில் மனோஜ்குமார் என்ற மகன் உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று குழந்தைக்கு பாட்டில் மூலம் பால் கொடுக்கும் போது மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனால் அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தை தவறி கீழே விழுந்ததால் டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த ரொட்டோ வேட்டரில் சிக்கி குழந்தை அடிபட்டது.
    • மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கும் எடுத்துச் சென்றனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே உள்ள வேலந்தாங்கல் மதுரா நார்சாம்பட்டு கிராமத்எதை சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியராஜ். இவர் நேற்று தனது உறவினர் டிராக்டரில் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது தனது 3 வயது குழந்தையை ஐஸ்வர்யா டிராக்டரின் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு டிராக்டரை ஓட்டி நிலத்தை உழுது கொண்டு இருந்தார். அப்போது திடீரென குழந்தை தவறி கீழே விழுந்ததால் டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த ரொட்டோ வேட்டரில் சிக்கி குழந்தை அடிபட்டது.

    காயமடைந்த குழந்தையை சி கிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கும் எடுத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்துபோனது. இச்சம்பவம் குறித்து நல்லாண் பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • குழந்தையை 8 நாட்களாக தாயிடம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. .தவறான சிகிச்சை காரணமாகவே குழந்தை இறந்துள்ளது என்று புகார் கூறினர்.குழந்தையை 8 நாட்களாக தாயிடம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
    • தவறான சிகிச்சை காரணமாகவே குழந்தை இறந்துள்ளது என்று புகார் கூறினர்.

    தருமபுரி,

    தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எதிரில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது.

    குறை பிரசவத்தில் பிறந்த அந்த குழந்தையை 8 நாட்களாக தாயிடம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் அந்த சிசு இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    ஆனால் இதற்கிடையே மருத்துவ கட்டணமாக ரூ.5 லட்சத்தை கறாராக வசூலித்து விட்டனராம். இந்நிலையில் அந்த பெண்ணின் உறவினர்கள் நேற்று இரவு அந்த மருத்துவமனை முன்பு திரண்டனர்.தவறான சிகிச்சை காரணமாகவே குழந்தை இறந்துள்ளது என்று அவர்கள் புகார் கூறினர்.

    ஆனால் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் வேண்டுமானால் பிரேதபரிசோதனை செய்துகொள்ளலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தி குழந்தையின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

    • குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.
    • சம்பவ இடத்திலேயே குழந்தை அனிகா உயிரிழந்தது.

    கிருஷ்ணகிரி,

    ஓசூர் சிப்காட் பகுதியை சேர்ந்தவர் ராதே.இவரது மனைவி அருணா. இவர்களது 3 வயது குழந்தை அனிகா . ராதே தனது மனைவி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அட்டக்குறிச்சி என்ற இடத்தருகே அவர்கள் சென்றபோது அவ்வழியாக சென்ற ஒரு லாரி சிக்னல் போடாமல் திடீரென திரும்பியுள்ளது.

    இதில் நிலைதடுமாறி ராதே குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை அனிகா உயிரிழந்தது.

    ராத்தேவும் அவரது மனைவி அனிதாவும் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பெற்றோர் கண் முன்னே பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பங்காரு நகர் வடக்கு பற்றிய சேர்ந்தவர் குணசீலன் (வயது 27) இவர் ஜேசிபி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.

    நேற்று இவர் தனது மனைவி மோனிகா, அக்கா நீலாவதி அவரது பெண் குழந்தை மயூரி (11/2). ஆகியோருடன் காஞ்சிபுரத்திலிருந்து மாமண்டூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டு இருந்தார். தூசி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிரே வந்த பைக்கும் குணசீலன் ஓட்டி சென்ற பைக்கும் நேருக்கு நேர் மோதியது.

    இதில் குணசீலன், மனைவி மோனிகா, அவரது குழந்தை மயூரி, அக்கா நீலாவதி ஆகியோர் பைக்கிலிருந்து கீழே விழுந்தனர். குழந்தை மட்டும் நடுரோட்டில் விழுந்தது.

    அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த அரசு பஸ் சக்கரம் குழந்தை மீது ஏறி இறங்கியது.

    இதில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது. இது குறித்து தகவல் அறிந்த தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயம் அடைந்த குணசீலன், அவரது மனைவி மோனிகா, அக்கா லீலாவதி ஆகியோரே சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் குழந்தை பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோரின் கண் முன்னே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தீக்காயம் அடைந்த 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
    • தாய் சமைத்துக் கொண்டிருந்தார்.

    கரூர்:

    திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள வெள்ளூர் சத்திரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 38). இவர் தற்போது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கோட்டமேட்டில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் என்ற 2 வயது மகள் இருந்தாள்.இந்தநிலையில்சம்பவத்தன்று வீட்டின் முன்பு தாய் அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது பொருட்கள் எடுப்பதற்காக தாய் வீட்டினுள் சென்று விட்டார். அப்போது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த குழந்தை அடுப்பில் இருந்த பாத்திரத்தை எடுத்தாள். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை மீது தீப்பிடித்து எரிந்தது.

    இதைக்கண்ட உறவினர்கள் தீக்காயம் அடைந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தாள்.இந்த சம்பவம் குறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகாசி அருகே பிளாஸ்டிக் கவர் விழுங்கிய 7 மாத குழந்தை பரிதாபமாக இறந்தது.
    • இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி துரைசாமிபுரம் அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன் (வயது 26).இவருக்கு கலைக்கதிர் என்ற 7 மாத ஆண் குழந்தை இருந்தது.

    சம்பவத்தன்று வீட்டில் விளையாடிகொண்டிருந்த கலைக்கதிர் கீழே கிடந்த பிளாஸ்டிக் கவர் துண்டு பேப்பரை எடுத்து விழுங்கி உள்ளான்.

    சிறிது நேரத்தில் குழந்தை மயங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு நிலைமை மோசமானதால் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை சேர்க்கப்பட்டது. அங்கும் சிகிச்சை பலனளிக்க வில்லை. இறுதியாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கலைக்கதிர் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தான்.

    இந்த சம்பவம் தொடர்பாக சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×